கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்; கலெக்டரிடம் கோரிக்கை மனு
![கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்; கலெக்டரிடம் கோரிக்கை மனு](https://tn96news.com/wp-content/uploads/2022/07/8dca4446-ff99-4a90-961b-8823682590eb-850x525.jpg)
கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றவர்கள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது
அந்த மனுவில் கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குருஸ் திவாகர் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலையில், கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சொரிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் பெரியசாமி, மாணவர் அணி துணை செயலாளர் தங்கமுத்து, கடலையூர் இளைஞர் அணி செயலாளர் காளிமுத்து, லிங்கம்பட்டி கிளைச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வெள்ளப்பெருக்கு, கிளை துணை துணை செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் மனு கொடுக்க சென்று இருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)