கோவில்பட்டி சைவ செட்டியார் சங்க 49-வது மகாசபை கூட்டம்
கோவில்பட்டி சைவ செட்டியார் சங்கத்தின் 49-வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் சேனாபதி, பொருளாளர் களியோகத்து அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் துணை செயலாளர் லட்சுமணன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக ராமையா செட்டியாறம் திருநெல்வேலி சிதம்பரம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர்
சைவ செட்டியார் சமூகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் (6௦௦-க்கு 552) பெற்ற மாணவி ஞானபொற்கொடி லாவண்யா, இரண்டாம் பரிசு(6௦௦-க்கு 534) உமா மகேஸ்வரி, மூன்றாம் பரிசு (6௦௦-க்கு 526 ) எஸ். உமாலட்சுமி, நான்காம் பரிசு (6௦௦ க்கு 512) மாணவி விஜயசுருதி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் 1௦-ம் வகுப்பில் முதலிடம் (5௦௦-க்கு 413 மார்க்) பெற்ற மாணவர் பி,சுதன்குமாருக்கும் பரிசு வழங்கப்பட்டது.