சிவராத்திரியும்… பிரதோஷமும் இன்று …
![சிவராத்திரியும்… பிரதோஷமும் இன்று …](https://tn96news.com/wp-content/uploads/2022/07/efb1e54f-b5c8-4ba9-85d3-cd4f343efde2-850x560.jpg)
ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. ஆனால் ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது.
இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும்.
மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள்.
ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.
பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு திரயோதசி திதியில் பிரதோஷம் வரும்.
பிரதோஷ நாளில் சிவாலயம் செல்வது இதுவரை இழந்தவற்றை தந்தருளுவார் சிவபெருமான்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை.
இந்த நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்கத் திருமேனிக்கும், நந்திதேவருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இந்த அபிஷேக ஆராதனையை கண்ணார தரிசித்தாலே இதுவரை இருந்த காரிய தடைகள் அனைத்தும் விலகும்.
தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனை வழிபடும் அற்புத நாள்.
பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள்.
சிவராத்திரியும், பிரதோஷமும் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்கு உரியது. பல மடங்கு பலன்களை வழங்கக்கூடியது.
இன்று செவ்வாய்க்கிழமை 26.7.2022 மாத சிவராத்திரியும், பிரதோஷமும் இணைந்து வருகிறது. இந்த அற்புதமான நாளில் சிவனாரை வழிபடுங்கள்.
இந்த அற்புதமான நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையை தரிசியுங்கள்.
முடிந்தால் அபிஷேக பொருட்களை வழங்குங்கள்.
நந்திதேவருக்கு அருகம்புல்லும், சிவபெருமானுக்கு வில்வமும் சாற்றி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரண்டும் சேர்ந்து வரும் நாளில் சிவனை வழிபடுவதால்.
சிக்கல்களும், இன்னல்களும் தீரும். கஷ்டங்களும், கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி
—–காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி —-
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)