தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடந்தது

 தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடந்தது

தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல பனிமயமாதா பேராலய திருவிழா நடக்கிறது.

தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது.
இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை நடைபெற்று 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45க்கு 2ம் திருப்பலியும், அதனை தொடர்ந்து 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் பிஷப் ஸ்டீபன் தலைமையில் காலை 9.30 மணிக்கு 3ம் திருப்பலி நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு பங்கு தந்தை ரூபஸ் பெர்ணான்டோ தலைமையில் பனிமயமாதாவுக்கு பொன்மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 3 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் விழாநாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆயர்கள், பங்கு தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர்.
குறிப்பாக ஆயர்கள் ஸ்டீபன், இவோன்அம்புரோஸ், அந்தோணிசாமி, முதன்மை குரு பன்னீர் செல்வம் மற்றும் பங்கு தந்தையர்கள், உலகமெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், இறைமக்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆகஸ்ட் 4ம்தேதியன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திற்குள் பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. ஆக.5ம் தேதி நடைபெறும் சிகர நிகழ்ச்சியான பெருவிழாவில் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.
பனிமயமாதா ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி. பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, தி.மு.க. மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், உள்பட பலரும் கலந்து கொண்டனர்,
திருவிழா ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள் பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை பால்ரோமன் மற்றும் அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *