தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் சரவணப்பெருமாள் தலைமையில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் திரவியம், வெள்ளத்துரை, பொன்னம்மாள், ராஜேஸ்வரி மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் […]
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை மாணவர்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றி அறிய 3 நாட்கள் களப்பயணம் சென்றனர். முதல் நாள் முண்டந்துறை பயணம் மேற்கொண்டனர். வனச்சரக கூட்ட அரங்கில் ,வனச்சரகர் கல்யாணி, வன காப்பாளர் அசோக்குமார்,கோவில்பட்டி தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் ஆகியோர் களக்காடு […]
சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று மார்கழி மாதத்தில் வரக் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் ஆடல் அரசனான நடராஜ பெருமானின் தரிசனத்தையும், அருளையும் பெற வேண்டிய அற்புதமான நாள் என்பதால் இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர். சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மகா அபிஷேகம் என சொல்லக் கூடியது மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் […]
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க – தமிழக முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராசுவை நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெயரிவிதனர், நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம்,செயலாளர் கோபால்சாமி, பொருளாளர் ஜோசப்ரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]
கோவில்பட்டியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கி.ரா.நினைவரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, பொங்கல் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்,செயலாளர் சக்திசெல்லப்பா முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத்தலைவர் ராஜகோபால்,பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன்,சமூக ஆர்வலர் தங்கராஜ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்/ பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகளை ஆர்.ஜே.மணிகண்டன் செய்திருந்தார்.தமிழ்நாடு கலை […]
வருடந்தோறும் ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதியில் தொடங்கிய மாரத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்..கல்லூரி உறுப்பினர் சரவணகுமார், முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர. விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் […]
விளாத்திகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தமாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக லட்சுமிபுரம், விருசம்பட்டி, சுப்பிரமணியபுரம், வில்வமரத்துப்பட்டி, விளாத்திகுளம் (ராஜீவ் நகர்)உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஜே..எஸ். டபிள்யு . நிறுவனத்தின் சார்பாக வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிவாரண பொருட்கள் வழங்கிய நிறுவன தலைவர் தென்னவன், மூத்த மேலாளர் பாரதி மற்றும் விளாத்திகுளம் மத்திய […]
கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணையர் டி.. ராஜீ தலைமையில் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது, கூட்டத்தின் போது இரண்டு சங்கங்களுக்கும் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் அதன்படி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக எம் பரமசிவம்,செயலாளராக ஆர் கோபால்சாமி, பொருளாளராக ஜோசப் ரத்தினம், துணைத் தலைவர்களாக டி ராஜு , ஆர் எஸ் சுரேஷ், இணைச் செயலாளராக ஜி […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர துணை செயலாளர் முனியசாமி தலைமையில் தன்னார்வ நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு நல மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி வட்டத்தில் ஏழை எளிய வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க விண்ணப்பித்துள்ளோம். இதுவரை 86 பேருக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்துள்ளோம். இந்த மனுக்களை விசாரித்து அதன் மீது உரிய […]
கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாண்டவர்மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா அன்புராஜ் தலைமை தாங்கினார். பாண்டவர் மங்கக்ல்ம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020