• May 23, 2025

கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி: முதலிடம் பெற்ற கூசாலிபட்டி அணிக்கு சுழற்கோப்பை- ரூ.20 ஆயிரம் பரிசு

 கோவில்பட்டியில் மாநில ஆக்கிபோட்டி: முதலிடம் பெற்ற கூசாலிபட்டி அணிக்கு சுழற்கோப்பை- ரூ.20 ஆயிரம் பரிசு

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் சார்பில்  6 வது  ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது  இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன.

போட்டியின் இரண்டாவது நாளான நேற்று  காலையில் நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் அசோக் நினைவு ஆக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் வீரன் சுந்தரலிங்கம் அணியினரை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 

மாலை 2.30 மணி அளவில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் சுந்தரலிங்கம் ஆக்கி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தி மூன்றாவது இடத்தை சுந்தரலிங்கம் அணியினரும் நான்காவது இடத்தை டாக்டர் அம்பேத்கர் அணியினரும் பெற்றனர்

4 மணியளவில் நடைபெற்ற இறுதிப் போட்டியை கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் போட்டியை தொடக்கி வைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கூசாலிபட்டி அசோக் நினைவு ஹாக்கி அணியும், யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் கூசாலிபட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி   3-0 என்ற கோல் கணக்கில் யங் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டிச் சென்றது

இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த யங்  சேலஞ்சர்ஸ் அணி இரண்டாவது பரிசை பெற்றது பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பொறுப்பாளரும் 33வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார்

திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், அருப்புக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் சங்கர், வழக்கறிஞர்கள் மோகன் செல்வகுமார் மற்றும் தொழிலதிபர்கள் சதீஷ், கமலேஷ், செல்வக்குமார் சுப்புராஜ் , காளிமுத்து பாண்டியராஜா, கலந்து கொண்டனர்

முதல் பரிசை தட்டிச் சென்ற கூசாலிபட்டி  அணிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சியாமளா  நினைவாக சுழற் கோப்பை மற்றும்  ரொக்க பரிசு 20 ஆயிரம் ஆகியவற்றை   தொழிலதிபர் எஸ். சதீஷ்  வழங்கினார்

இரண்டாவது பரிசு பெற்ற யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு வெல்கம் டிரேடர்ஸ் உரிமையாளர் கமலேஷ் சுழற் கோப்பையும் 15,000 ரொக்க பரிசு வழங்கினார்.

 மூன்றாவது பரிசு பெற்ற சுந்தரலிங்கம் ஆக்கி அணியினருக்கு பேச்சன்னா நைனா நினைவு சுழற் கோப்பையும் \ரூ 10000 ரொக்க பரிசையும் 7வது வார்டு உறுப்பினர் சுப்புராஜ் வழங்கினார்

நான்காவது பரிசு பெற்ற அம்பேத்கர் ஆக்கி அணிக்கு தனுஷ்கோடி பாண்டி நினைவு  கோப்பையும் ரூ 7 ஆயிரம் ரொக்க பரிசையும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா வழங்கினார்.

போட்டியின் தலைமை நடுவராக திருச்செல்வம் மற்றும் நடுவர்களாக சுதாகர், காளிதாஸ் , மதன் ராயர், அஜித், மாரியப்பன், வேல்முருகன், சண்முகப்பிரியா, ஆகியோர் செயல்பட்டனர் இறுதியில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்,’

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாரியப்பன், சண்முகராஜ், சுதாகர், மதன்  , முனிராஜ், குமார் , தினா , கருப்பசாமி , விஜய், ஆகியோர் செய்திருந்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *