மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் கடம்பூர் செ.ராஜூ சந்திப்பு

முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்
தீப்பெட்டி தொழிலை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர்கள் மற்றும் உதிரி பாகங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிசேரி கிராமத்தில் புதிதாக தேசியமயமாக்கபட்ட வங்கி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த கடம்பூர் ராஜு ,இனாம் மணியாச்சி மற்றும் செட்டிக்குறிச்சி பகுதியில் தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
