கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்லக்கோரி, கோட்டாட்சியரிடம் காங்கிரஸ் மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 3 மற்றும் 4 வது வார்டு சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜூன் 6ஆம் தேதி அப்பகுதி மக்கள் சார்பில் சாலை மறியல் செய்யப்போவாதாக கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன்,மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜ், செயலாளர் துரைராஜ்,சமூக ஊடகபிரிவு தலைவர் ராஜாசேகரன்,3வது வார்டு காங்கிரஸ் தலைவர் முருகேசன்,ஐஎன்டியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜாசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
