• May 22, 2025

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

 கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில்,7 எம்.பி.க்கள் தலைமையில் மத்திய அரசு குழுக்களை அமைத்துள்ளது.

இதில்  திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக மத்திய  அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான குழு இன்று (22/05/2025) ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் கனிமொழி தலைமையிலான குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த குழுவில், சமாஜ்வாதி கட்சியை சார்ந்த எம்.பி. ராஜீவ் ராய், பா.ஜ.க. கட்சியை சார்ந்த எம்.பி. கேப்டன் பிரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.பி. பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *