கோவில்பட்டியில் மாநில ஆக்கி: இன்று மாலை இறுதிப்போட்டி

கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் நடத்தும் 6 வது ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
முதல் போட்டியை வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமையில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கமலேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீரர்களை யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கிளப் செயலாளர் மாரியப்பன் அறிமுகம் செய்து வைத்தார்

முதலாவது கால் இறுதிப் போட்டியில் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இலுப்பையூரணி அணியை வீழ்த்தியது
இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் சுந்தரலிங்கம் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தியது

மூன்றாவது கால் இறுதி போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக B அணியினரைவீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நான்காவது கால் இறுதி போட்டியில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென்காசி SDAT ஸ்டார் ஹாக்கி அகாடமி அணியினரை வீழ்த்தியது.

போட்டியில் நடுவர்களாக சுதாகர், காளிதாஸ், மாரியப்பன், மதன் ராயர், சிவானந்த, அஜித் , சண்முகப்பிரியா, ஆகியோர் செயல்பட்டனர்
இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியும் அசோக் நினைவு ஆக்கி அணியும் விளையாடுகின்றன
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சுந்தரலிங்கம் ஆக்கி அணியும் யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன

தொடர்ந்து இன்று மாலை மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் நடைபெறும் அதை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.
