ரூ. 45 ஆயிரம் கோடி வேளாண் பட்ஜெட்டை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று காலை நடைபெற்றது.
மாநில தலைவர் பூ. விசுவநாதன், தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் கோபிநாத் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*ரூ. 45 ஆயிரம் கோடியில் அறிவித்த தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டை காலதாமதப்படுத்தாமல் நிதிஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்
*சட்டசபை மாநில கோரிக்கையில் இடம் பெற்ற தடுப்பணைகள் நீரொழிங்கிகள், ஆறுகள், வாய்க்கால்கள், புனரமைப்புப் பணிகளை செயல்படுத்த முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

*மழையினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், வாழை, சின்ன வெங்காயம் ஆகியவற்றிற்கு நிவாரணம், இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
*நெல்லுக்கு ரூ.3500/-, மக்காச்சோளத்திற்கு ரூ. 3500/-, நிலக்கடலைக்கு ரூ.12000/-, கரும்பிற்கு டன்னிற்கு ரூ. 4500/- என மத்திய அரசு குறைந்த ஆதார விலையை அறிவிக்க வேண்டும்.
*இலவச விவசாய மின் இணைப்பில் சுமாரர்ட் மீட்டர் பொருத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும.

*2025-26ம் ஆண்டிற்கான 50000/- இலவச விவசாய மின் இணைப்பை காலதாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும்.
*நகைக்கடனை அசலையும் வட்டியும் கட்டி திருப்பி வைக்க வேண்டும் என் கெடுபிடியை கைவிட்டு வட்டியை மட்டுமே கட்டி நகைகடனை திருப்பி வைத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.
*வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வனத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சூரிய ஒளி மின்வேலி இலவசமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கோதாவரி, காவேரி நீர்இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
*நெடுஞ்சாலைத்துறை சுகர்கேன் சாலைகள் அகலப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் மழைக்கு முன்பாக தூர்வாரப்படுதல் வேண்டும்.
*தோட்டக்கலை துறை வேளாண் பொறியியல் துறை, விவசாயிகளுக்கான மானியத்திட்டங்களை காலதாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன,
