காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமநாயக்கன்பட்டியில் காவல்துறை சார்பாக புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆல்பர்ட் ஜான் கூறியதாவது:-
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளாலம்.மேலும் உங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்
இவ்வாறு ஆல்பர்ட் ஜான் கூறினார்.
