• May 23, 2025

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி தொடக்கம்; ரசிகர்கள் உற்சாகம்

 கோவில்பட்டியில்   அகில இந்திய ஆக்கி போட்டி தொடக்கம்; ரசிகர்கள் உற்சாகம்

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று (23-ந்தேதி) தொடங்கியது. ஜூன் 1 ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம்டேக்ஸ் ஆக்கி அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 42-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 60-வது நிமிடத்தில் அதே  அணி வீரர் மந்தீப் மோர் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

எதிர் ஆணியினர் எவ்வளவோ போராடியும் ஒரு கோல்கூட போடா முடியவில்லை. இறுதியில்  2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

சுரேஷ் குமார் மற்றும் ராஜீவ் ராத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில்-க்கு வழங்கப்பட்டது.

அகில இந்திய ஆக்கி போட்டியின் தொடக்க  விழா இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது., விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அடுத்த போட்டிகளை தொடங்கி  வைக்கிறார். 

தொடக்க விழாவை தொடர்ந்து நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஆக்கி கழக அணியுடன் சென்னை தமிழ்நாடு லெவன் ஆக்கி அணி மாலை 5.15 மணியளவில் மோதுகிறது.

3வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியுடன் கர்நாடகா ஆக்கி பெல்லாரி அணி மாலை 6.45 மணியளவில் மோதுகிறது. 

4வது லீக் ஆட்டத்தில் சென்னை அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் ஆக்கி அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி இரவு 8.15 மணியளவில் மோதுகிறது.

நாளை 24.5.2025 காலை 7 மணியளவில் நடைபெறும் 5வது லீக் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் சென்னை இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் மோதுகின்றன.

\மாலை  5.15 மணியளவில் நடைபெறும் 6வது லீக்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் பெங்களூரு ஆக்கி கர்நாடகா அணியும் மோதுகின்றன

மாலை 6.45 மணியளவில் நடைபெறும் 7வது லீக் போட்டியில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

இரவு 08.15 மணியளவில் நடைபெறும் 8வது லீக் போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும் மும்பை சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.

பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் ஆக்கி அணி வீரர்களின் ஆட்டத்தை ரசிக்க கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம ரசிகர்கள் தயாராகி விட்டனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வைகையில் ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும் .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *