அஜித்தின் 61-வது படம் `துணிவு’ செகண்ட் லுக் வெளியீடு
செகண்ட் லுக்
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என படக்குழு தலைப்பிட்டுள்ளது . ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘

ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.அத்துடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரிகிறார்.
இந்த நிலையில் ‘துணிவு’ செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.







