• March 6, 2026

சர்க்கரைவள்ளிக்கிழங்கு தோல் கசாயம் தரும் ஆரோக்கியம்

 சர்க்கரைவள்ளிக்கிழங்கு தோல் கசாயம் தரும் ஆரோக்கியம்

சீனிக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக்கிழங்கின் மேல் தோலிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனுடைய நன்மைகள் பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன:

*தோலில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

•சர்க்கரைவள்ளிக்கிழங்கின் தோலில் உள்ள சில கூட்டுபொருட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.

*தோல் கசாயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவதில் உதவுகிறது.

*இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல். இதில் உள்ள பொட்டாசியம் போன்ற கனிமங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.

*தோலில் உள்ள தாதுப்பொருட்கள் அழற்சியைக் குறைக்கும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது.

*கசாயத்தில் உள்ள நார்ச்சத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவுகின்றன.

*சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை பயன்படுத்தவும்.

*சுத்தம் செய்த தோலை கொதிக்கும் நீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்கு விட்டு வடிகட்டி எடுக்கவும்.

*இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் அல்லது தேவைப்பட்டபோது குடிக்கலாம்.

ஒவ்வொருவரின் உடலமைப்பும் வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதால், அதிக அளவில் சாப்பிடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையை பெறுவது மிகவும் நல்லது.

இயற்கை உணவு ஆர்வலர் கோவில்பட்டி கோ.சுரேஷ்குமார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *