மதுரை செல்லூரில் கூடுதல் கால்வாய் அமைக்க ரூ.11.9 கோடி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன்.
அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்து கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.