கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 11-ம் நாளான நேற்று முன்தினம். மதியம் 3 மணிக்கு மேல் அம்பாள் தபசு கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளினார்., மாலை 7 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சுவாமி பூவனநாதராக, அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நடைபெற்றது. கோவில்பட்டி மெயின் ரோட்டில் காட்சி கொடுத்தல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாள் தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. மாலை 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் திருகல்யாண விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு மேல் யசுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர். வழிநெடுக பக்தர்கள் நின்று வழிபட்டனர், திருக்கல்யாண நிகழ்ச்சியை கோவில்பட்டி ராகம் மீடியா, யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.