• November 1, 2024

குற்ற செயல்களை தடுக்கும் `ரவுடி எதிர்ப்பு குழு’போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை

 குற்ற செயல்களை தடுக்கும் `ரவுடி எதிர்ப்பு குழு’போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் முறப்பநாடு, வல்லநாடு ஆகிய பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அங்கு பணியில் இருந்த ரவுடி எதிர்ப்பு குழு  (Anti Rowdy Team) போலீசாரை  தணிக்கை செய்து அறிவுரை வழங்கினார்.

\குற்ற செயல்களை தடுக்கும் ரவுடி எதிர்ப்பு குழு போலீசாரின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தி தீவிர ரோந்து பணி மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 350 குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் ரவுடி எதிர்ப்பு குழு போலீசார் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின்  பணிகள் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.

ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு போன்ற பகுதிகளில் ரவுடிகளை கண்காணித்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க முழு நேரமும் ரவுடி எதிர்ப்பு குழு  காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடவும், மேலும் கமாண்டோ பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சி பெற்ற காவலர்களை இந்த குழுவில் ஈடுபடுத்தவும் உத்தரவிட்டார்.

.புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் குற்ற வரைபடம் தயாரித்து அதன் அடிப்படையில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். என்று  மாவட்ட போலீஸ் சூப்பிர்ண்டு ஆல்பர்ட் ஜான்  தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *