• June 8, 2025

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் அறிவிப்பு

ராணிப்பேட்டையில்  மாவட்டங்களுக்கு இடையிலான மாநில  அளவில் சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்துகொண்டு விளையாட இருக்கிறது,. தூத்துக்குடி மாவட்ட அணி C பிரிவில்  இடம்பெற்றுள்ளது.  இப்பிரிவில் ராணிப்பேட்டை, கோயமுத்தூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன 

போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன மாநில சாம்பியன் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தமிழக சப் ஜூனியர் ஆக்கி அணிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள்..

போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட அணியினருக்கான  பயிற்சி முகாம் கடந்த 7 நாட்களாக நடைபெற்றது முகாமின் இறுதியில் இன்று காலை 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் அணி வீரர்களை  தேர்வு குழுவினர்  அஸ்வின் ,சுரேஷ்குமார் ஆகியோர் அறிவித்தனர் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பின்வருமாறு:-

 கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியில் இருந்து முகேஷ் குமார், முத்து ராஜேஷ், கார்த்திக், சுபாஷ், கருணாகர பாண்டியன் , லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து யோகேஷ் ராஜா, பரத், கோகுல கிருஷ்ணன், ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்திலிருந்து  சூரிய பாண்டியன், முகுந்தன், பிரின்ஸ் டேனியல், அம்பேத்கர் ஆக்கி அணியில் இருந்து ஈஸ்வர், வேல்  குமார், இலுப்பையூரணி ஆக்கி அணியிலிருந்து ஹரிஷ் ,

கயத்தார் மகா சக்தி ஆக்கி அணியில் இருந்து இசக்கி ராஜா, பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியில் இருந்து ரோஷன், மோகன், செயின்ட்  பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தனுஷ்கோடி பாண்டி  மாவட்ட ஆக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் அணி மேலாளராக ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கும் பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அனைவருக்கும் சீருடை வழங்கி வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சி   ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி தலைமையில் நடைபெற்றது. தொழிலதிபர் கணேஷ்குமார், மனநல மருத்துவர் பாலாஜி,  நகர கூட்டுறவு வங்கி மேலாளர் செல்வக்குமார் ஆகியோர்  வீரர்களுக்கான சீருடை வழங்கி மாநில சாம்பியன் போட்டியில் நமது மாவட்ட அணி வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

 இந்த நிகழ்ச்சியில்  ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, வழக்கறிஞர் பெரியதுரை, உடற் கல்வி ஆசிரியர்கள் பாரதி ராஜன், திருச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, முருகன் , ஆகியோர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *