• June 8, 2025

இந்தி படத்தில் தனுஷ் ஜோடி கீர்த்தி சனோன்?

 இந்தி படத்தில் தனுஷ் ஜோடி கீர்த்தி சனோன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கிடையில், தனுஷ் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு அடுத்ததாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.
இந்தநிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார் பின்னர் அவரது இயக்கத்திலேயே ‘அட்ரங்கி ரே’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3-வது படம் ‘தேரே இஸ்க் மேன்’. கலர் எல்லோ புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கீர்த்தி சனோன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *