நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் கடிதம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட அக்கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு […]