கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியில் விளையட்டு விழா நடைபெற்றது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். நான்காம் ஆண்டு எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி அஞ்சலி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
இந்திய கப்பற்படை அகாடமியின் பயிற்சி அலுவலர் மற்றும் தேசிய பளு தூக்கும் வீரர் கண்ணுடையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி விழாவினை தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தினை இரண்டாம் ஆண்டு எலக்ட்ரிகல் துறை மாணவர் கருப்பசாமி பெற்றார். பெண்கள் பிரிவில் முதலாம் ஆண்டு கணிணி அறிவியல் துறை மாணவி காமாட்சி பிரியதர்ஷினி பெற்றார்.
மாணவர்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தினை மஞ்சள் நிற அணி பெற்றனர். இரண்டாம் இடத்தை பச்சை நிற அணியினர் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தினை ஊதா நிற அணி பெற்றனர். இரண்டாம் இடத்தை பச்சை நிற அணியினர் பெற்றனர். முடிவில் உதவி பேராசிரியை சத்யா நன்றி கூறினார்.

