• May 14, 2025

தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை

 தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக  சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம மனிதர்கள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இவரை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்த மோகன்ராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவர் விளாத்திகுளம் அல்லது கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவருகிறது.

மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சாத்தூர் டிஎஸ்பி 949810484 வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 9498196111 ஆகிய நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *