கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார் திருவிழா கொடியை ஏற்றினார். அப்போது மேளதாளங்கள் முழங்க இறை மக்கள் இறை புகழ்ச்சி பாடி கர ஓசை எழுப்பிய வண்ணம் இருந்தனர்,
பங்கு தந்தை சார்லஸ் அடிகளார் கொடியேற்றி வைத்து உலகின் சமாதானம் வேண்டி புறா பறக்க விட்டார். பின்னர் திருத்தல பங்கு சந்தை சார்லஸ் அடிகளார் பாளை மறை மாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார், திருத்தல உதவி பங்குத்தந்தை அருண்குமார் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.

இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை திருத்தல பாதுகாவலர் புனித சூசையப்பர் திரு உருவ சப்பரபவனியும், நாளை ஞாயிற்றுக்கிழமை ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் வைத்து திருப்பலியும் அங்கிருந்து நற்கருணைப்பவனியும் நடக்கிறது.
தொடர்ந்து திருத்தலத்தில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும் விழா நாட்களில் இறை மக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்படும்.


