தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; அதிகாரிகளுடன் ஆல்பர்ட் ஜான் ஆலோசனை

தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிர்நாடு ஆல்பர்ட் ஜான் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதம் ஏந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதம் ஏந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் நடத்தப்பட்ட விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையின் கூறுகள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தினார்.

