• May 19, 2025

Month: April 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி பூங்கா மேற்கு சாலை ஈமக்காரியம் செய்யும் இடத்தில் காத்திருப்பு கொட்டகை திறப்பு

கோவில்பட்டி பூங்கா மேற்கு சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் ஈமக்காரியம் செய்யும் இடத்தில் பேவர் பிளாக் தரைத்தளம் மற்றும் சிறிய காத்திருப்பு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா நடந்தது.முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, பேவர் பிளாக் தரைத்தளம் மற்றும் சிறிய காத்திருப்பு கொட்டகை ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார். ஒன்றிய அதிமுக செயலாளர்கள் பழனிச்சாமி,அழகர்சாமி,போடு சாமி,மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி,நகர அவைத்தலைவர் அப்பாசாமி,ஆவின் தலைவர் […]

செய்திகள்

பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட  புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய பாலத்திற்கு அருகே ரூ.545 கோடி மதிப்பிலான புதிய ரெயில் பாலம் கட்டுமான பணிகளை, கடந்த 2019, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்தார். தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் கடந்தாண்டு 2024 இறுதியில் நிறைவடைந்தது. இந்த புதிய ரெயில் பாலம் 2,078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரமும் கொண்டது. பழைய பாலத்தை காட்டிலும் 3 மீட்டர் […]

கோவில்பட்டி

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை: கோவில்பட்டியில் காங்கிரசார் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம் செல்லும் புதிய ரெயில் பாதை, தாம்பரம் – ராமேசுவரம் ரெயில் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பாரத பிரதமர் மோடி ராமேசுவரம் வந்தார்.  அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருந்தார்.  அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் […]

தூத்துக்குடி

போலீஸ் நிலையத்தில் கைதி சாவு: டி. எஸ். பி. உள்பட 9 போலீசாருக்கு

தூத்துக்குடியில் கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்த போது தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் உயிரிழந்தார்.  இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி விஏஓ தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், காவல்துறை விசாரணையில் வின்சென்ட் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.  இதனை அடுத்து. அப்போது பணியில் இருந்து தற்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தென்காசி […]

தூத்துக்குடி

கோவில்பட்டி ஆர்த்தி உள்பட  3 இளம் தொழில் முனைவோருக்கு தலா ரூ.10 லட்சம்;

“ தூத்துக்குடி இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, “புத்தொழில் களம்” என்ற ஒரு முன்னெடுப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் “புத்தொழில் களம்” நிகழ்ச்சி இன்று (05/04/2025) நடைபெற்றது. இந்த திட்டத்தில்,18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், ஏற்கனவே  400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. […]

செய்திகள்

பெருங்காமநல்லூர் தியாகிகள் மணி மண்டபத்தில் அஞ்சலி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூரில் 3.4.1920 அன்று  ஏற்பட்ட கைரேகை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரமலைக்கள்ள இன மக்கள் பலர் பலியானார்கள். இந்த தியாகிகள் நினைவு தினத்தில்  பெருங்காமநல்லூர் சென்று மணிமண்டபத்தில் முன்னோர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வழிபாடு செய்தனர். அதேபோன்று கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு, தேசியத் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான  சவுத்திரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சாவுடன் பிடிபட்ட 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (19) லிங்கம்பட்டியை  சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) ஆகிய  2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி ஆட்சியர்  க. இளம்பகவத் உத்தரவின் பேரில், 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இருவரும்  ஓராண்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்திகள்

தர்பூசணியில் ரசாயனம் கலந்ததாக பரவிய தகவல்: சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிட

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, தர்பூசணி விற்பனை களை கட்டியது. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் .”சென்னையில் […]

சினிமா

அமலாக்கத்துறை சோதனை:’எல்2 எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.5 கோடி பறிமுதல்; இயக்குனர் பிருத்விராஜுக்கு

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, கோகுலம் சிட்பண்ட், நீலாங்கரை இல்லம் உள்ளிட்ட […]

தூத்துக்குடி

போக்சோ வழக்கில் கைதானவருக்கு  5 ஆண்டு சிறை :

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி செம்பூர் பகுதியைச் சேர்ந்த உதயசிங் மகன் மாரி (எ) மாரிமுத்து (29) என்பவரை ஆழ்வார்திருநகரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று குற்றவாளியான மாரி (எ) மாரிமுத்துக்கு 5 வருடங்கள் […]