பெருங்காமநல்லூர் தியாகிகள் மணி மண்டபத்தில் அஞ்சலி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூரில் 3.4.1920 அன்று ஏற்பட்ட கைரேகை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரமலைக்கள்ள இன மக்கள் பலர் பலியானார்கள்.
இந்த தியாகிகள் நினைவு தினத்தில் பெருங்காமநல்லூர் சென்று மணிமண்டபத்தில் முன்னோர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வழிபாடு செய்தனர். அதேபோன்று கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு, தேசியத் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சவுத்திரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிராம மக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், பொருளாளர் இளங்கோ, கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் மாயாண்டி, மகளிர் அணி செயலாளர் வசந்தி, விளாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஷோபனா, மாவட்ட பொறுப்பாளர்கள் தவம், தீபா, மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்







