பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை: கோவில்பட்டியில் காங்கிரசார் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்


ராமேசுவரம் செல்லும் புதிய ரெயில் பாதை, தாம்பரம் – ராமேசுவரம் ரெயில் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பாரத பிரதமர் மோடி ராமேசுவரம் வந்தார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்னுச்சாமி பாண்டியன்,அருண்பாண்டியன்,பிரேம்குமார்,மாரிமுத்து, காமராஜ், பெத்துராஜ், சுப்பாராயலு,மாவட்டத் துணைத் தலைவர் அய்யலுச்சாமி,மாவட்டச் செயலாளர் துரைராஜ்,மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், ஐஎன்டிசி ராஜசேகரன்,பொதுக்குழு உறுப்பினர் உமா சங்கர்,ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன்,வட்டாரத் தலைவர் செல்லத்துரை,விவசாய அணி மாவட்ட தலைவர் பேரையா, நிர்வாகிகள் ஜேம்ஸ் லாரன்ஸ், சண்முகராஜா, அருள்தாஸ்,சண்முகவேல்,மரிய தங்கராஜ்,வேல்ச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
, தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும், கல்விக்கு நிதி தர மறுப்பதை கண்டித்தும், வேலை உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும் கோஷமிட்டனர்.


