ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக 28 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளரும் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக செயலாளருமான முனைவர் செ. குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். தலைவர் காளிமுத்து பாண்டியராஜா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. துணைச் செயலாளர்கள் பாரதி ராஜன், வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்கள் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் தந்தை சக்திவேல் சிறப்பு விருந்தினராக […]
தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாக இருக்கிறது. அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இது மிக மெதுவாக நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது நாளை […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6). அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் அருண்ராஜ் என்பவர் கஞ்சா போதையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி கொலை செய்து விட்டார், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி நடந்த இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி முத்துலாபுரம் வைப்பாற்றில் பதுங்கி இருந்த அருண்ராஜை சுற்றி வளைத்து பிடித்து ஸ்டேசனுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். கஞ்சா […]
தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு சென்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், கேள்வி-நேரம் முடிந்தபின், டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டார். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் இடமில்லை […]
அமைச்சர் கே.என்.நேரு வீடு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக அளவில் நடந்துள்ள பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து […]
முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா 10-ந்தேதி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் புணராவர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மஹா கும்பாபிஷேகம் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை, கோவில் நிர்வாக குழுவினர் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது கோவில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன, இப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. வருகிற 10-ந் தேதி காலை 5 […]
கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிப்பு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கோவில்பட்டியில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் நகரின் பல இடங்களில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் கீழே சாய்ந்து விழுந்தன. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று, மழை காரணமாக மின்சார விநியோகம் 3௦ நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் இடையிடையே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது,. கோவில்பட்டி […]
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் ராம நவமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது இதனையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன். மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் […]
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கூ..குரும்பபட்டியில் ஊர் காவல் தெய்வம் சட்டைக்காரன் கோவில் வாழைப் பழங்களை குவியல் குவியலாக வைத்து வருடம் தோறும் பங்குனி மாதத்தில் வழிபடும் விழா ஊர் குடும்பனார் அய்யனார் தலைமையில் திருவிழா நடைபெற்றது. அதன்படி கிராம மக்கள் வாழைப்பழங்களை கூடையில் வைத்து கிராமத்திலிருந்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 50 ஆயிரம் வாழை பழங்களுக்கு மேல் தங்கள் நேர்த்தி கடனாக […]
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி […]