முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழா 10-ந்தேதி தொடக்கம்




தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் புணராவர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மஹா கும்பாபிஷேகம் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது.
12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை, கோவில் நிர்வாக குழுவினர் பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
அதன்படி தற்போது கோவில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன, இப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
வருகிற 10-ந் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை மங்கள இசை, திருமறை விகேநேச்வா பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன,
மாலை 5.31 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பூஜைகளை தொடர்ந்து முதல்கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடக்கின்றன,
மறுநாள் 11-ந் தேதி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை பல்வேறு பூஜைகளை தொடர்ந்து மண்டப பூஜை,வேத பாராயணம், மூல மந்திர ஹோமம் தீபாராதனை நடக்கிறது.
காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் ஆசீர்வாதம் யாத்ரா தானம், கடம் புறப்பாடு, வளமா வருதல் நடைபெற்று கோபுரம் மற்றும் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
மதுரையை சேர்ந்த ஈசானசிவம் லெ.க.கார்த்திக் ராஜா சிவாச்சாரியார் சிறப்பு வேள்வியை நடத்துகிறார். மதுரை வேலு நாயகம் குழுவினரின் நாதஸ்வரம் இசை நடக்கிறது.,
கும்பாபிஷேகத்தன்று பகல் 12 மணிக்கு சென்னை எம்.தம்பித்துரை, பி.பரமசிவம் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார்கள். மாலை 5 மணிக்கு குத்துவிளக்கு பூஜையை சென்னை முருகேச பாண்டி, முத்தையாபுரம் ரெங்கசாமி, தூத்துக்குடி இசக்கிராஜா ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். பூஜையை நடத்துபவர்கள் மதுரை பூமதி தங்க மாரியப்பன் மற்றும் குழுவினர்.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் எஸ்.தங்கவேல் , பொருளாளர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் மண்டல பூஜை மே மாதம் 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது.
அப்போது 108 சங்காபிஷேகம்,16 வகை அபிஷேக அலங்காரம் நடைபெறும்.


