கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழக பொதுக்குழு கூட்டம்

ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக 28 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளரும் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக செயலாளருமான முனைவர் செ. குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். தலைவர் காளிமுத்து பாண்டியராஜா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
துணைச் செயலாளர்கள் பாரதி ராஜன், வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்கள் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் தந்தை சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்/
முன்னாள் இந்திய வீரர் அஸ்வின், மருத்துவர் தனசேகர் , தீயணைப்புத்துறை வீரர் மோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் மாரியப்பன், சுரேஷ்குமார், அருண்குமார், முன்னாள் ராணுவ வீரர் காளிதாஸ், சுரேஷ்குமார்,
பிரேம் குமார் , ஜெகதீஸ்வரன், முகேஷ் குமார், மற்றும் வீரர்கள், கலந்து கொண்டனர் இறுதியில் மனநல மருத்துவர் பாலாஜி நன்றி கூறினார் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக சட்ட ஆலோசகர் செல்வக்குமார் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*மே மாதத்தில் பெண்களுக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி மற்றும் மாஸ்டர்ஸ் 40 வயதுக்கு மேல் ஆண்கள் ஆக்கி போட்டி நடத்துவது
* ஜூன் மாதத்தில் 12 வயது மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி நடத்துவது
* ஆக்கி வீரர்களையும் பயிற்சியாளர்களையும் ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்துவது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
