கோவில்பட்டிஅரசு பள்ளியில் `நிழல் இல்லா நாள் ‘செயல் விளக்கம்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்-11ம் தேதி திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏப்.12ம் தேதி தூத்துக்குடி, ஏப்.13ம்தேதி கோவில்பட்டியிலும் நிழல் இல்லா நாளாகும்.
இதனை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வட்டமாக தரையில் நின்றும் குச்சியை ஒரு வட்ட வடிவில் உள்ள அட்டையின் மைய பகுதியில் ஊன்றியும் நிழலை அளந்து பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன்முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி கலந்துகொண்டு நிழல் இல்லா நாள் மற்றும் வானவியல் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தார்.


