• April 7, 2025

வாழைப்பழங்களை குவித்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்

 வாழைப்பழங்களை குவித்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கூ..குரும்பபட்டியில் ஊர் காவல் தெய்வம் சட்டைக்காரன் கோவில் வாழைப் பழங்களை குவியல் குவியலாக வைத்து வருடம் தோறும் பங்குனி மாதத்தில் வழிபடும் விழா ஊர் குடும்பனார் அய்யனார் தலைமையில் திருவிழா நடைபெற்றது.

அதன்படி கிராம மக்கள் வாழைப்பழங்களை கூடையில் வைத்து கிராமத்திலிருந்து மேள தாளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்தனர். 

இதில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 50 ஆயிரம் வாழை பழங்களுக்கு மேல் தங்கள் நேர்த்தி கடனாக  சட்டைக்காரன் சாமிக்கு படைத்தனர். 

விழாவில் கிராம மக்கள் ஒன்று கூடி  கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து  சுவாமி யின் அருள் பெற்ற வாழைப்பழத்தை ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *