கோவில்பட்டி கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜை

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் ராம நவமி சிறப்பு பூஜை நடைப்பெற்றது
இதனையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.
பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன். மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


