தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்.,15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் மாதம் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவன நாத சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்கு வசதிக்காக விதவிதமான ராட்டினங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 7ம் தேதி முதல் இந்த ராட்டினங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். […]
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. அன்றைய தினத்தில் 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடகழகம் ஆலோசனை கூட்டம் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 30ம் தேதி தர்மபுரியில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்வது மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்கள் சேர்க்கவும் மற்றும் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டி அமைத்து பாகமுகவர்கள் கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை மாலை வேளைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் […]
நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதிய ஜனதா கட்சி நகரத்தலைவர் காளிதாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில்,மாவட்ட துணைத் தலைவர் பாலு, நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், முனியராஜ், லட்சுமணக்குமார், மாரிச்சாமி,வேல்முருகன்,ஜெயபிரகாஷ்,காசிராஜன், மகாராஜன், சீனிவாசன்,ஊடகப்பிரிவு அம்மன் மாரிமுத்து, மகளிர் அணியினர், இளைஞரணியினர் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் . க.பொன்முடி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்பரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு 7வது திருநாள் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு 9 மணிக்கு சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமமற்றும் மாணிக்கவாசகர் சுவாமி சப்பரத்தில் சிவப்புசாத்தி எழுந்தருளல் திருவீதி உலா நடைபெற்றது. மண்டகப்படிதாரர் கோவில்பட்டி சைவவேளாளர்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி- அம்பாள் தரிசனம் செய்தனர்