தூத்துக்குடியில் நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த மாணவர்கள்


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொது மக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்பரை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நிழல் இல்லா நாள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும்.
23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். ஏப்.10ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏப்-11ம் தேதி திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏப்.12ம் தேதி தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, ஏப்.13ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ராமநாதபுரம். ஏப்.14ம் தேதி கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும்.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி டிலைட் பப்ளிக் ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் வட்டமாக நின்றும், ஒரு மேஜையில் வட்ட வடிவில் உள்ள பொருளின் மையப்பகுதியில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.இதில் சரியாக 12:18மணிக்கு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ் சௌந்திரநாயகம் தலைமை தாங்கினார்.. பள்ளி தாளாளர் ஜான் பிரபாகரன்.கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை கமலா ராணிஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி (TASS)) மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி,முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நிழல் இல்லா நேரத்தை கண்டறிவது செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். வ.உ.சி கல்லூரி இயற்பியல் பேராசிரியர் ஜான் பிரின்ஸ். சூரியனின் நிழலைக் கொண்டு பூமியின் சுற்றளவை கண்டுபிடிப்பது குறித்து பயிற்சி அளித்தார்.முடிவில் அறிவியல் ஆசிரியை நெபில்லா நன்றி கூறினார்.

