கோவில்பட்டியில் கொளுத்தும் வெயிலில் தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்




கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து தினமும் காலை மாலை வேளைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரதாரோகணம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டம் காண பக்தர்கள் குவிந்தனர். கோவில் முன்புறம் மட்டுமின்றி நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் திரண்டு இருந்தனர். மேலும் எட்டயபுரம் சாலை பகுதியிலும் பக்தர்கள் கூடி இருந்தனர்.
சுவாமி- அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதன் பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்கள் இடையே திருத்தேரோட்டம் தொடங்கியது முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் முதலில் புறப்பட்டது,..
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.பி.என்.ஸ்ரீதர்,, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .க.இளம்பகவத், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி,ஆய்வாளர் சிவகளைப்ரியா, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ரமேஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முகராஜ்,கோவில் ஆய்வாளர் சிவகலைப்ரியா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 9 வது நாள் மண்டகப்படிதாரர் கம்மவார் சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து மதியம் சுமார் 1 மணி அளவில் நிலையை அடைந்தன.
தேரோட்டத்தின் போது இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக சென்றனர். பெண்கள் சிலர் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தேரோட்டத்தின் பொது வெயில் கொளுத்தியது. பகதர்கள் குளிர்பான கடைகளை தேடி அலைந்தனர். அதே சமயம் சமூக சேவை நிறுவனத்தினர் பலர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.
பக்தர்களை கவரும் வகையில் கோவில் மைதானத்தில் ராட்டினங்கள் மற்றும் தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கூட்டம் அலைமோதியது.
இன்று இரவு 7 ,மணிக்கு யானை வாகனம்,அன்ன வாகனத்தில் சுவாமி-அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர் கோவில்பட்டி வணிக வைசிய சங்கம்
விழாவின் இறுதிக்கட்டமாக நாளை 14-ம் தேதி தீர்த்தவாரி, 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

.

