Month: December 2024

கோவில்பட்டி

மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் விபத்துக்களை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த வேண்டும். காமராஜர் நகர் மேற்கு தெருவில் அரசாணை பிறப்பித்தும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படாததை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  மதித்தோப்பு ரோடு பிஆர்எஸ் சேமியா பேக்டரி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மந்தித்தோப்பு சாலையில் நகராட்சி எல்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தாலுகா […]

கோவில்பட்டி

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க புதிய செயலாளர், இணை செயலாளர் தேர்வு

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. சங்க தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். பொருளாளர் என்.ராஜவேல் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், கூட்டம் தொடங்கியது, முன்னாள் செயலாளர் தேவதாஸ் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் புதிய செயலாளராக வரதராஜன், இணை செயலாளராக  .தினேஷ் (தனலட்சுமி மேச் ஒர்க்ஸ்) ஆகியோர்  ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து இருவருக்கும் போப் தி கிங் மேச் பாக்டரி ஆர்.கருப்பசாமி பதவி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாநில ஆக்கி போட்டி: சென்னை பல்கலைக்கழக அணி முதலிடம்

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாசாமி நினைவு 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆக்கி போட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் 4 நாட்கள் நடந்தன. போட்டியில் 25 அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில் கோவில்பட்டி அசோக் நினைவு ஆக்கி கிளப் (ஏ.எம்.சி.) அணியும், இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கர் ஆக்கி கிளப் அணியும் மோதின. இதில், 3 – 0 என்ற கோல் கணக்கில் ஏ.எம்.சி. அணி […]

தூத்துக்குடி

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்; தூத்துக்குடி விழாவில்

தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 1.05 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சால்வை, புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வரவேற்றனர். கட்சி நிர்வாகிகளுடன் முதல் அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ரூ.32 கோடியே […]

கோவில்பட்டி

அண்ணா பல்கலை சம்பவம்: கோவில்பட்டியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து. கோவில்பட்டியில் இன்று அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள், தமிழக […]

தூத்துக்குடி

18 சப்-இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 18 சப்-இன்ஸ்பெக்டர்களை நிர்வாக காரணங்களுக்காவும், விருப்ப மாறுதல் அடிப்படையிலும் பணியிடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு  ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.  கோவில்பட்டி  கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தூத்துக்குடி தாளமுத்துநகருக்கும், புதியம்புத்தூர் தரன்யா தென்பாகத்திற்கும், முறப்பநாடு காவுராஜன் தூத்துக்குடி தென்பாகத்திற்கும், தருவைகுளம் முனியசாமி தூத்துக்குடி வடபாகத்திற்கும், கண்ட்ரால் ரூம் ராய்ஸ்டன் மத்தியபாகத்திற்கும், தென்பாகம் மாணிக்கராஜ் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதே போல குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெர்ஸ்லின் புதியம்புத்தூருக்கும், […]

செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்; கவர்னரை விஜய் சந்தித்து மனு அளித்தார்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று  கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர்  ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-,இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் […]

கோவில்பட்டி

இளையரசனேந்தல்  குறுவட்ட விவசாயிகளுக்கு மானியம்

இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_ இன்று 31-ந்தேதி  காலை 11 மணிக்கு  கோவில்பட்டி  வேளாண்மை விரிவாக்க மையத்தில்  பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு  மானியம்  வழங்கப்பட உள்ளது . எனவே விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து முன்பதிவு  செய்திட  கேட்டு கொள்ளப்படுகிறது.  தேவைப்படும் ஆவணங்கள்   ஆதார் கார்டு ஜெராக்ஸ் -1 ரேஷன் கார்டு ஜெராக்ஸ் – 1 பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -1 பட்டா – 2 1/2 […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட திட்டப்பணிகள்: அதிகாரிகளுடன்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13077 கோடி மதிப்பீட்டில் 1320 மெகாவாட் (2 x 660 MW) அனல்மின் நிலையப் பணிகள், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கும் பணிகளில், சாலை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவுற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் தண்ணீர் விநியோகத்திற்கான பணிகள் பற்றி முதல் அமைச்சர் கேட்டறிந்தார்.,  ஓட்டப்பிடாரம் […]

ஆன்மிகம்

தீப வழிபாடு பலன்கள்

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைக தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. கோலமிடப்பட்ட வாசலில் 5 தின்ணைகளில் 4,, […]