மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
![மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/20b5add4-63f0-47a1-8a0a-7db940611fc0-850x560.jpeg)
கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் விபத்துக்களை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த வேண்டும். காமராஜர் நகர் மேற்கு தெருவில் அரசாணை பிறப்பித்தும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படாததை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதித்தோப்பு ரோடு பிஆர்எஸ் சேமியா பேக்டரி அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மந்தித்தோப்பு சாலையில் நகராட்சி எல்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தாலுகா துணை செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகாக்குழு உறுப்பினர்கள் ரெங்கநாதன், மணிகண்டன், பெருமாள், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாதர் சங்கம் நகரச் செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)