கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கும் பணி;
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, சில அமைப்புகளின் போராட்டம் காரணமாக மேம்பாலத்துக்கு பதிலாக சுரங்க பாலம் அமைக்கப்பட்டது. இது கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் மழைக்காலத்தில் சுரங்க பாலத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் இருந்து சாக்கடை ஊற்று பெருகி சாலையில் ஓடுவது வாடிக்கையாகி விட்டது. ரெயில்வே சுரங்க பாலம் என்பது நாளடைவில் சாக்கடை பாலம் என்று அழைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. […]