தூத்துக்குடியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு ; அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு  

 தூத்துக்குடியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு ; அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு  

நெல்லை, தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திர நிர்மலா சீதாராமன் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இன்று காலை 10.15 க்கு சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டார். பகல் 12 மணியளவில் தூத்துக்குடி வந்த்டைந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கலெக்டர் அலுவலகம் சென்றார். அங்கு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர், அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இழப்புகள் பற்றி நிதிமந்திரி நிர்மலா சீதாராமனிடம் விளக்கினார்கள். ஆய்வு  கூட்டத்தில் மத்திய இணை மந்திரி முருகன், ,தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்ட்டார்.

தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 5.30 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.

மாலை 5.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்லும்  நிர்மலா சீதாராமன், இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.

நாளை (டிசம்பர் 27 )மத்திய அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் பிரசார இயக்கமான விக்சிட் சங்கல்ப யாத்ரா அக்டோபர் முதல் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பகல் 12 மணிக்கு ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டருடன் கலந்துகொள்கிறார் பிற்பகலில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை மதுரை செல்கிறார். இரவு மதுரையில் தங்குகிறார்.

அடுத்தநாள் டிசம்பர் 28 பகல் மதுரையில் இருந்து விமானம் மூலம் நிர்மலா சீதாராமன் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *