தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படும் […]
பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப் படகில் கடலுக்கு சென்று […]
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து மக்கள் மனம் கவர்ந்தவர். அவருக்கு சினிமா ரசிகர்கள் அதிகம் உண்டு. தென் இந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். சினிமாவில் நடித்து கொண்டு இருந்தபோதே அரசியலில் நுழைந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். அரசியலில் அவரது வெற்றி நீடிக்கவில்லை. உடல்நலகுறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 30,31,1-ந்தேதிகளில் மழை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள வானிலை அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 30, 31- மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு […]
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினர். பாலத்தின் இருவரமும் அகற்ற வேண்டிய 90 ஆக்கிரமிப்புகளில் 57 ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே துறை மூலம் அல்லது பட்டாதாரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட்டனர். மீதமுள்ள 33 ஆக்கிரமிப்புகளில் 13 ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த […]
மரணம் அடைந்த தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.தமிழ் நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்து வருகிறது. நாளை காலையில் இருந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது . இதயத்தொடர்ந்து அங்கு ஏற்பாடுகள் விமானமாக நடைபெற்று […]
மறைந்த விஜயகாந்த், சினிமாத்துறையில் வரலாற்று சாதனை படைத்தவர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். சிறு வயது முதலே சினிமாமீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்து வந்து அதுபற்றி விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை […]
கோவில்பட்டி அருகே உள்ள படா்ந்தபுளி தோணுகால் மேலத் தெருவை சோ்ந்தவர அய்யனாா் (வயது 28). கோவில் பூசாரியான அவரிடம், கடந்த ஜூன் 10-ஆம் தேதி 3 பவுன் சங்கிலி, கைபேசி மற்றும் ரூ.11 ஆயிரத்தை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரத்தை சோ்ந்த கிஷோா்குமாா் மகன் அருண்குமாா் (19), அதேபகுதி 8-வது தெருவை சோ்ந்த தா்மராஜ் மகன் பரமேஸ்வரன் (24), தூத்துக்குடி பி அன் டி காலனியை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா (30) […]
மழை..சோ.. என்று பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது.தெருக்களில் தண்ணீர் பெருகி ஓடியது. சாதாரண மழை என்று எல்லோரும் நினைக்க நேரமாக நேரமாக மழை நீடித்துக்கொண்டிருந்தது. இரவு ..நெருங்க..நெருங்க..இடியுடன் மழை கொட்ட..இன்னும் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும் என்று நினைத்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரே இருட்டு..வழக்கம் போல் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என்று காத்திருக்க..மின்சாரம் வரவில்லை. என்னாச்சு..கரண்டு வரலை..எங்கேயும் டிரான்ஸ்பார்மர் வெடிச்சுட்டா..? பலரும் பலவிதமாக பேச..வீடுகளில் மெழுகுவர்த்திகள் மின்னத் தொடங்கின. […]
தூத்துக்குடி மாவட்ட புதிய கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சி முகமை) ஐஸ்வர்யா ராமநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிறு வயதில் இருந்து ஐ.ஏ.எஸ். பணி மீது ஆர்வம் கொண்டு படித்து தனது ஆசையை நிறைவேற்றியவர். பண்ருட்டி அருகே மருவூர் கிராமத்தை சேர்ந்த ராமநாதன்-இளவரசி தம்பதியரின் மகள். இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு அக்காள் உண்டு. தந்தை ராமநாதன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தாயார் இளவரசிக்கு சிறுவயதில் திருமணம் முடிந்துவிட்டதால், திருமணத்துக்கு பிறகு படித்து பட்டதாரி அரசு பணிக்கான […]