• May 20, 2024

Month: November 2023

சினிமா

படப்பிடிப்பில் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யா காயம்  

சென்னை பூந்தம்மல்லி அருகே கங்குவா தமிழ் சினிமா படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். சண்டை காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்து விட்டது. இதில் காயமடைந்த சூர்யா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சையை தொடர்ந்தார்கள். இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

செய்திகள்

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மரணம்

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த பாத்திமா பீவி, தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிசையில் இருந்த அவர் இன்று காலை மரணம் அடைந்தார். 1997 முதல் 2001-ம் ஆண்டு வரை பாத்திமா பீவி தமிழக கவர்னராக பதவி வகித்தார். திருவனந்தபுரத்தில் பள்ளி மற்றும் […]

செய்திகள்

தற்போது எந்த கட்சியுடனும் த.மா.கா.கூட்டணியில் இல்லை; ஜி கே வாசன் பேட்டி

திண்டுக்கல் தரகு மண்டி மஹாலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி கே வாசன் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. […]

சினிமா

சினிமாவை விட்டு விலகியது ஏன்? நடிகை விசித்ரா சொன்ன கசப்பான அனுபவம்   

தமிழ் திரையுலகில் 1990 காலக்கட்டத்தில் கவர்ச்சியிலும், நகைச்சுவையிலும் பிரபல நடிகையாக திகழ்ந்தவர், விசித்ரா. தற்போது தனியார் டெலிவிஷலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல் கலந்து கொண்டுள்ளார். 50 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை விசித்ரா  பகிர்ந்தார்.. அவர் கூறியதாவது:-  ஒருமுறை முன்னணி தெலுங்கு நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஹீரோ, […]

கோவில்பட்டி

உடல் உறுப்புகள் தானம்: விவசாயி உடலுக்கு  மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் மரியாதை  

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் மஜ்ரா மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (வயது 42) என்பவர் 20.11.2023 இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து கிருஷ்ணசாமியின்  உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான அனுமதியை விவசாயி குடும்பத்தினர்  வழங்கினர். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு முழு விவரம்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.  இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் […]

தூத்துக்குடி

மழை தண்ணீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு  பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சரியான வாருகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மாநகராட்சி மேயர் ஜெகன் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மாநகராட்சி   17வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ் நகர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில், விஸ்வநாத தாஸ் நினைவிடம் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் (இணைப்பு) சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் டென்சிங் தலைமையில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர் சிஐடியூ மேற்பார்வை தலைவர் பாசுதேவ் ஆச்சாரிய்யா, சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கும், பாலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியான பாலஸ்தீனர் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.  சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் தொடக்க  உரையாற்றினார். தொழிற்சங்க சட்ட திருத்தம் பற்றியும் இன்றைய அரசின் சூழ்நிலை பற்றியும் விளக்கி […]

தூத்துக்குடி

விபத்தில் சிக்கி மூளைசாவு: ஆசிரியரின் உடல் உறுப்புகள்  தானம்

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (வயது 33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது. வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார். நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் பள்ளி முடிந்து பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் வந்தபோது, […]