• May 9, 2024

Month: November 2023

கோவில்பட்டி

திருச்சியில் மாநில அறிவியல் மாநாடு: கோவில்பட்டியில் இருந்து இளம் விஞ்ஞானிகள் பயணம்

மாநில அளவிலான 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட இளம் விஞ்ஞானிகள் வழியனுப்பும் நிகழ்ச்சி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். யு.பி.,மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமுதவள்ளி, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாந்தகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இல்லம் தேடி கல்வி […]

தூத்துக்குடி

300 பெண்களுக்கு திருமண நிதிஉதவி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதிஉதவி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 300 பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் நிதியுதவியை அமைச்சர் […]

ஆன்மிகம்

நாளை கார்த்திகை தீபதிருவிழா; திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமாக போற்றப்படுகிறது இந்த தலம். இங்கு சிவபெருமானே மலையாக வீற்றிருந்து காட்சி தருவதாக ஐதீகம். எனவேதான், பக்தர்கள் இந்த மலையை வலம் வந்து (கிரிவலம்) சிவபெருமானை வணங்குகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது மகத்துவம் வாய்ந்தது. பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், […]

கோவில்பட்டி

மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

கோவில்பட்டியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் முன்னிலை வகித்தார்.அறிவியல் ஆசிரியர் சீனிவாசகன் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புவதற்கும், தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதற்கும் பயிற்சி அளித்தார்.

தூத்துக்குடி

வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க வழிமுறைகள்; ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலமாக பருவக்கால மாற்றத்தினால் டெங்கு, டைபாய்டு, ப்ளு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் வருவதை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டைவலி, உடல்வலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை வைரஸ் பாதிப்பிற்க்கான அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாள்களில் குணமடைவர். பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்கவைத்து பின் […]

கோவில்பட்டி

போதுமான வசதிகள் இல்லை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமராபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை  சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 9-ம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். குமராபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் குமாரபுரம் காலணியைச் சேர்ந்த குழந்தைகள் தான் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் விபத்து: அரசு ஊழியர் பலி

கோவில்பட்டியில் உள்ள நோய் தடுப்பு பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் நாகரத்தினம் (வயது 47). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் கோவில்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நாகரத்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ரெயில் நிலையம் நோக்கி  சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பஸ், நாகரத்தினம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]

கோவில்பட்டி

கழுகுமலை பகுதியில் கன மழைக்கு மக்காசோள பயிர்கள் நாசம் 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை(87மி. மீ.)காரணமாக மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே வாலிபர் வெட்டிக்கொலை 

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதி மகன் அருண் பாரதி (20). அய்யனார் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் அருகே அருண் பாரதியை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் சரமாரியாக வெட்டினர்கள். இதில் பலத்த காயம் அடைந்த அருண் பாரதி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலையை தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விடடனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று […]

தூத்துக்குடி

போதைபொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆய்வு கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (23.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது. .தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர்  முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர்  கண்ணன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர்  ரேவதி, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர்  ராஜாமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா […]