• May 20, 2024

போதுமான வசதிகள் இல்லை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்

 போதுமான வசதிகள் இல்லை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில்  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமராபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை  சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 9-ம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

குமராபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் குமாரபுரம் காலணியைச் சேர்ந்த குழந்தைகள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருப்பதாகவும், மேலும் பள்ளிக்கு சென்றுவர போதுமான வசதி இல்லை என்றும், மெயின் ரோடு பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் அந்தவழியாக குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் , விவசாய நிலங்கள் வழியாக குழந்தைகள் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் அந்தப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. 

மேலும் சிலர் தங்களது நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து விடுவதால் பள்ளிக்கு குழந்தைகள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பள்ளியை வடக்கு குமராபுரத்திற்கு  மாற்ற வேண்டும், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலையத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி கடந்த 9ந்தேதி முதல் என்று கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தங்களது கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்பதால் இன்று காலையில் அப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்றிதழ் (TC) தர வலியுறுத்தி அங்குள்ள ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் இது குறித்து கல்வித்துறை மேல் அதிகாரிகளிடம் கேட்ட பின்னர் பள்ளி மாற்றச் சான்றிதழை தருவதாக ஆசிரியர் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *