• May 20, 2024

Month: October 2023

செய்திகள்

சிறுபான்மை மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.பூத்கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில்  அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- தி.மு.க. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து இன்று […]

செய்திகள்

தமிழ்நாட்டில் தனியார் மூலம் மின்சார பஸ்கள் இயக்க முடிவு

தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மின்சார பஸ்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பஸ்கள் பொது தனியார் கூட்டு மாதிரி கீழ் இயக்கப்படும்,அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும்,நடத்துனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் B வரை மின்சார பஸ்களை இயக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக போலியோ தினம்

உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்புமருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 24-ந்த்தேதி (இன்று) உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி என்லைட் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் நடந்த உலக போலியோ தின நிகழ்ச்சியில் போட்டித் தேர்வு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கிடைப்பதை உறுதிசெய்திடவும், போலியோ இல்லாத உலகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குழந்தைகளை அரிசியில் `அ’ எழுத வைக்கும் சடங்கு  

நாடு முழுவதும் விஜயதசமி இன்று  கொண்டாடப்பட்டது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளின் சுட்டு விரலைப்பிடித்து, தட்டில் பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பார்கள். இதே போல் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கடவுள் சன்னதியில் தாயின் மடியில் குழந்தையை அமர வைத்து முன்புறம் வாழை இலை விரித்து அரிசி பரப்பி  `அ’ என்று எழுத வைப்பார்கள். […]

செய்திகள்

ஸ்டிரைக் வாபஸ்; வழக்கம் போல் ஆம்னி பஸ்கள் ஓடும் என்று அறிவிப்பு

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஆம்னி பஸ்கள் பெரும்பாலானவை அதிக கட்டணம் வசூளித்தாதாக கூறப்படுகிறது. இதை யொட்டி  120 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சிறைப்பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள், இன்று (24-ந்தேதி ) மாலை முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என்று அறிவித்தனர். இன்றுடன் விடுமுறை  முடிந்து நாளைக்கு அலுவலக வேலைக்கு சென்னை திரும்புபவர்கள் கவலைக்கு உள்ளானார்கள். இந்தநிலையில்  அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆம்னி […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சரஸ்வதி பூஜை

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  விநாயகருக்கு அருகில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி காட்சி அளித்தார். கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் சிலைக்கு ஆட்சியர்  மரியாதை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள லட்சுமிபதி முதன் முறையாக இன்று கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.  கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. நினைவரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கோவில்பட்டி தாசில்தார் லெனின் உடனிருந்தார்.

கோவில்பட்டி

நவராத்திரி விழா: சரஸ்வதி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்றது. தினமும் காலை வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை கடைசி 3 நாட்கள் சரஸ்வதிபூஜை நடைபெற்றது. நவராத்திரி நிறைவு நாளான இன்று  நடைபெற்ற சரஸ்வதி  பூஜையில் முத்துமாரியம்மன் சரஸ்வதி கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு […]

கோவில்பட்டி

பனை தொழிலில் பார்வையற்ற முதியவர்; அண்ணாமலை வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த பொன்பாண்டி என்ற பார்வை திறனற்ற முதியவர் பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார், இவருக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை தெரியாது. இருந்தும் அதை குறையாக கொள்ளாமல் 50 ஆண்டுகளாக இந்த பனை தொழிலை செய்து வருகிறார்.  தனி ஒரு ஆளாக யாருடைய உதவியும் இன்று தினமும் 20 லிருந்து 30 பனை மரங்களில் ஏறி இறங்குகிறார். பதநீர் இறக்குவது, கருப்பட்டி தயார் செய்வது, ஓலை விற்பனை செய்வது என தனது […]

ஆன்மிகம்

கனவும்-பலன்களும்….

*.கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும். *கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள். *ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது *கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி […]