கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
![கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/IMG-20231023-WA0173-850x560.jpg)
துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ இல்லத்தில் நடைபெற்றது. மாநில அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், துாத்துக்குடி வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான காஞ்சி பன்னீர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்
முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ., பேசும்போது, ‘துாத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் செப்., 13ம் தேதி தொடங்கிவிட்டோம். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் 808 பூத்கள் உள்ளன. இதில், கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து பணியாற்றவேண்டும்’. என்றார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மோகன், சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், எட்டையாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, செல்வக்குமார், வண்டானம் கருப்பசாமி, அன்பு ராஜ், அழகர்சாமி, மகேஸ், காமாட்சி காந்தி, கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போடுசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ,, நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ராமர் லெட்சுமணப்பெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், நீலகண்டன், ஆபிரகாம் அய்யாத்துரை, செல்வக்குமார், பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)