கோவில்பட்டியில் உலக போலியோ தினம்
உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்புமருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 24-ந்த்தேதி (இன்று) உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவில்பட்டி என்லைட் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் நடந்த உலக போலியோ தின நிகழ்ச்சியில் போட்டித் தேர்வு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கிடைப்பதை உறுதிசெய்திடவும், போலியோ இல்லாத உலகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். பயிற்சி மைய நிர்வாகி மகேஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்து செல்வம்கலந்துகொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் நன்றி கூறினார்.