பா.ஜனதாவில் இருந்து விலகுகிறேன்- அண்ணாமலைக்கு கவுதமி கடிதம்
பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கனத்த இதயத்தோடு பா.ஜ.க/வில் இருந்து விலகுகிறேன், 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உளைத்து உள்ளேன். 2௦21 தேர்த;ஊ; ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை.
அழகப்பன் என்பவர் என்னிடம் இருந்து பணம், சொத்து,ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக புகார் செய்து இருந்தேன், ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாக பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் செயல்படுகின்றனர்.
பா.ஜ.க.வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை. எனவே மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வாறு கடிதத்தில் கவுதமி கூறி இருக்கிறார்.