காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சரஸ்வதி பூஜை
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் வழிகாட்டுதழின் படி, உப தலைவர் எம்..செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்றது.
.சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.கே.ராஜேந்திர பிரசாத், பள்ளி பொருளாளர் ஜெ.ரத்தினராஜா, பள்ளிக்குழு உறுப்பினர்கள் ஆர்.. தாழையப்பன் அவர்கள், பி. தங்கமணி, கே. பால்ராஜ், டி. மனோகரன், பி.. செல்வம் மற்றும் பள்ளி முதல்வர் கே.. பிரபு ஆகியோர் பூஜையை தொடங்கி வைத்தனர்.
பூஜையில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள் கலந்து கொண்டனர்,. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.